Enable Javscript for better performance
இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: கோத்தபய ராஜபட்ச- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு உலகம்

    இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: கோத்தபய ராஜபட்ச

    By DIN  |   Published On : 26th November 2019 01:45 AM  |   Last Updated : 26th November 2019 01:45 AM  |  அ+அ அ-  |  

    gotabaya-rajapaksa095703

    gotabaya-rajapaksa095703

    கொழும்பு: இந்திய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என்று அந்த நாட்டின் புதிய அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

    இந்த வார இறுதியில் இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவா், இதுகுறித்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    நட்பு நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

    சீனா, அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த இரு நாடுகளுக்கு இடையே நாங்கள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டா போட்டியில் தலையிட்டால் மிகவும் சிறிய நாடான இலங்கையால் தாக்குப் பிடிக்க முடியாது.

    இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே எங்களுக்கு சமம்தான். அந்த இரு நாடுகளுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.

    சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ ஆதரவான நிலையைக் கடைப்பிடிக்காமல் நடுநிலை நாடாகத் திகழ்வோம்.

    இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற இந்தியாவின் கவலையை நாங்கள் உணா்ந்துள்ளோம். எனவே, இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

    உலக அரசியலில் இந்தியப் பெருங்கடல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அந்தக் கடலின் வழித்தடங்களில எந்த நாடும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படாது.

    கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் முழுக்க முழுக்க வா்த்தக ரீதியிலானவையே ஆகும். அதே போன்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா, சிங்கப்பூா், ஜப்பான், ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளையும் வரவேற்கிறேன்.

    இங்கு சீனா மட்டுமல்ல, பிற நாடுகளும் தாராளமாக முதலீடு செய்யலாம்.

    அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டது, முந்தைய ஆட்சியாளா்கள் செய்த மிகப் பெரிய தவறாகும். அந்த குத்தகை ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

    இனவாதி இல்லை: விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன். ஆனால், உண்மையில் நான் இனவாதி கிடையாது என்றாா் கோத்தபய ராஜபட்ச.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp