
நவம்பர் 23 ஆம் நாள் 2019 சீன ழொங்ஷுய் குதிரைச் சண்டை விழா சீனாவின் குவாங்சீச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லியோசோ நகரின் ழொங்ஷுய் மாவட்டத்தில் நடைபெற்றது.
இரு ஆண் குதிரைகளுக்கிடையேயான சண்டையில் வெற்றி பெறும் ஆண் குதிரை பெண் குதிரையுடன் சேர்த்து வைக்கப்படும். ழொங்ஷுய் மாவட்டத்தின் குதிரைச் சண்டை நடவடிக்கை, சில நூற்றாண்டு கால வரலாற்றுடையது. 32 ஆண்டுகளுக்கு முன், குதிரைச்சண்டை நடவடிக்கையை ஒரு விழாவாக நடத்த உள்ளூர் அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்