
கோப்புப் படம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் தலைவரும், துணைத் தலைமையமைச்சரும், சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தையின் சீனத் தரப்பின் தலைவருமான லியூஹே, நவம்பர் 26ஆம் நாள் காலை, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லத்திசெர், நிதி அமைச்சர் ஸ்டீவன் முனுச்சின் ஆகியோருடன், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
ஒன்றுக்கு ஒன்று கவனம் செலுத்தும் மையப் பிரச்னைகள் பற்றி இரு தரப்பினரும் விவாதம் நடத்தி, தொடர்புடைய பிரச்னைகளைச் செவ்வனே கையாள்வது பற்றி பொது கருத்தை எட்டினர். முதல் கட்ட உடன்படிக்கைக் கலந்தாலோசனையின் எஞ்சிய விடயங்கள் பற்றி தொடர்பை நிலைநிறுத்த வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்