Enable Javscript for better performance
அமெரிக்காவின் ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதா: சீனா எதிர்ப்பு!- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவின் ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதா: சீனா எதிர்ப்பு!

    By DIN  |   Published on : 28th November 2019 11:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    china-america


    அமெரிக்கா ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதாவை நிறைவேற்றியதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் 28ஆம் நாள் அறிக்கை ஒன்றில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

    அமெரிக்காவின் இந்தச் சட்டம், சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் செயலாகும். மேலும், இது, சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டுக்கும் புறம்பானது. இதனைச் சீன அரசும் மக்களும் உறுதியாக எதிர்க்கின்றனர். 

    எந்த விதமான வெளிப்புற ஆற்றலும், ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு செய்வதை எதிர்க்கும் சீனாவின் மன உறுதி ஒருபோதும் மாறாது, “ஒருநாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் மன உறுதியில் மாறுபாடு இருக்காது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப்பேணிக்காக்கும் மன உறுதியும் எப்போதும் மாறாது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    தகவல்: சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai