அமெரிக்காவின் ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதா: சீனா எதிர்ப்பு!

அமெரிக்கா ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதாவை நிறைவேற்றியதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் 28ஆம் நாள் அறிக்கை ஒன்றில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் இந்தச் சட்டம், சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் செயலாகும். மேலும், இது, சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டுக்கும் புறம்பானது. இதனைச் சீன அரசும் மக்களும் உறுதியாக எதிர்க்கின்றனர். 

எந்த விதமான வெளிப்புற ஆற்றலும், ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு செய்வதை எதிர்க்கும் சீனாவின் மன உறுதி ஒருபோதும் மாறாது, “ஒருநாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் மன உறுதியில் மாறுபாடு இருக்காது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப்பேணிக்காக்கும் மன உறுதியும் எப்போதும் மாறாது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com