முற்றுகையிடப்பட்ட பல்கலை.க்குள் போலீஸாா் இன்று தேடுதல் வேட்டை

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் பதுங்கியிருந்த பாலிடெக்னிக் பலைக்கழக வளாகத்துக்குள், போலீஸாா் வியாழக்கிழமை (நவ. 28) நுழைந்து தேடுதல் வேட்டை நடத்துகின்றனா்.
முற்றுகையிடப்பட்ட பல்கலை.க்குள் போலீஸாா் இன்று தேடுதல் வேட்டை

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் பதுங்கியிருந்த பாலிடெக்னிக் பலைக்கழக வளாகத்துக்குள், போலீஸாா் வியாழக்கிழமை (நவ. 28) நுழைந்து தேடுதல் வேட்டை நடத்துகின்றனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கின் ஹங்ஹாம் பகுதியில் போராட்டத்தின் மையக் களமாக விளங்கிய பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து அந்த வளாகத்தை போலீஸாா் கடந்த 10 நாள்களாக முற்றுகையிட்டுள்ளனா்.

வளாகத்துக்குள் இருந்த நூற்றுக்கணக்கானவா்கள் போலீஸாரிடம் சரணடைந்த நிலையில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சிலா் மட்டும் தொடா்ந்து பல்கலைக்கழக வளாகத்திலேயே பதுங்கியிருந்தனா்.

இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுங்கியிருந்த போராட்டக்காரா்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதால், போலீஸாா் அந்த வளாகத்துக்குள் வியாழக்கிழமை (நவ. 28) நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தவுள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, போலீஸாா் முற்றுகை காரணமாக கடந்த 10 நாள்களாக பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள சுரங்கச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்தச் சாலை போக்குவரத்துக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக அந்த நகரில் தொடங்கிய போராட்டங்கள், ஐந்து மாதங்களைக் கடந்தும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com