Enable Javscript for better performance
சீன-இந்திய ஒத்துழைப்புக்கு இரு நாட்டு நிபுனர்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீன-இந்திய ஒத்துழைப்புக்கு இரு நாட்டு நிபுனர்கள் சந்திப்பு

    By DIN  |   Published on : 30th November 2019 02:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    201911281014005

     

    சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம்-நிதி அயோக் இடையேயான 5-ஆவது பேச்சுவார்த்தை 28-ஆம் நாள் சீனாவின் வூ ஹான் நகரில் நடைபெற்றது.

    இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 நிபுனர்கள் இதில் கலந்து கொண்டு, சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்குக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை செய்தனர்.

    புள்ளிவிவரங்களின் படி 2018ஆம் ஆண்டில் சீன-இந்திய வர்த்தகத் தொகை பத்தாயிரம் கோடி டாலரை எட்டி, 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட 33 மடங்கு அதிகரித்துள்ளது.

    நீண்டகாலமாக இந்தியாவின் முதலாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்ந்து வருகிறது. இந்தியாவும் ஆசியாவில் சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.

    (தகவல்: சீன ஊடகக் குழுமம்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai