ஆபாசப் படங்களைத் தேடி 6000 யாஹூ கணக்குகளை 'ஹேக்' செய்த பொறியாளர் 

அமெரிக்காவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஒருவர் இளம்பெண்களின் ஆபாசப் படங்களைத் தேடி 6000 யாஹூ கணக்குகளை 'ஹேக்' செய்த விபரம் தெரிய வந்துள்ளது.
ஹேக்  செய்யப்பட்ட யாஹூ கணக்குகள்
ஹேக் செய்யப்பட்ட யாஹூ கணக்குகள்

கலிபோர்னியா: அமெரிக்காவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஒருவர் இளம்பெண்களின் ஆபாசப் படங்களைத் தேடி 6000 யாஹூ கணக்குகளை 'ஹேக்' செய்த விபரம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ட்ரேசி நகரத்தைச் சேர்ந்தவர் டேனியல் ருய்ஸ் (34). மிகுந்த பாலியல் இச்சை கொண்டிருந்த இவர் இணையத்தில் பெண்களின் ஆபாசப் படங்களைத் தேடி, தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் என சுமார் 6000 நபர்களின் யாஹூ கணக்குகளை ஹேக் செய்துள்ளார். அதில் பெரும்பாலானோர் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை அவர் ஒருவரது யாஹூ கணக்குகளை ஹேக் செய்து விட்டால் அதைக் கொண்டு சம்பந்தப்பட்டவரின் ஐ-கிளவுட், பேஸ்புக், ஜிமெயில் மற்றும் இதர ஆன்லைன் சேவைகள் அனைத்தையும் வெற்றிகரமாக ஊடுருவி ஆபாசப் படங்களைத் தேட முடியும்.

அவ்வாறு சேமித்த படங்களை எலாம் அவர் தனியாக ஒரு கணினியில் சேமித்து வைத்துள்ளார். பணியிடத்தில் அவர் மீது சந்தேகம் வரத் துவங்கிய உடனேயே, அவற்றை எல்லாம் அழித்து விட்டார் என்பது குறிபிடத்தக்கது.

பின்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அவர் திங்களன்று தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். வியாழனன்று அவருக்கு வழங்கப்பட உள்ள தீர்ப்பில் அவருக்கு ஐந்து ஆண்டுகால வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com