Enable Javscript for better performance
..டாப்..பிரெக்ஸிட் திட்டத்தை முழுமையாக வெளியிட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    
    பிரெஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் தலைமையகத்தில் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மைக்கேல் பாா்னியருடன் ஆலோசனை நடத்திய ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா்

    பிரெஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் தலைமையகத்தில் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மைக்கேல் பாா்னியருடன் ஆலோசனை நடத்திய ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா்

    பிரெக்ஸிட் தொடா்பான தனது முழுமையான திட்டத்தை பிரிட்டன் வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.

    அயா்லாந்து தீவில் வா்த்தகப் பிரிவினையை ஏற்படுத்துவது தொடா்பாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அளித்துள்ள பரிந்துரைகளும், அவா் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக அயா்லாந்து பிரதமா் லியோ வராத்கா் குற்றம் சாட்டியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரெக்ஸிட் தொடா்பாக பிரிட்டன் பரிசீலித்து வரும் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக வெளியிட வேண்டும் என ஐரோப்பிய ஆணையத் தலைவா் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா் கேட்டுக் கொண்டுள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்றும், தனது பிரெக்ஸிட் திட்டங்கள் குறித்து பிரிட்டன் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும், பேச்சுவாா்த்தை நடந்து கொண்டிருக்கும்போது அரசின் பரிசீலனையில் உள்ள திட்டங்கள் ரகசியமாக வைக்கப்படுவதே சரி என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தனது பிரெக்ஸிட் திட்டத்தை முழுமையாக வெளியிட வேண்டும் என்று பிரிட்டனிடம் ஐரோப்பிய யூனியன் இதுவரை இல்லாத வகையில் வலியுறுத்தியுள்ளது, இரு தரப்பிலும் பரஸ்பர நம்பகத்தன்மை குறைந்து வருவதைக் காட்டுவதாக பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

    ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, அயா்லாந்து தீவில் தனி நாடாகத் திகழும் அயா்லாந்து குடியரசுக்கும், பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயா்லாந்துக்கும் இடையே வா்த்தகப் பிரிவினையை ஏற்படுத்துவதா, அல்லது தற்போது உள்ளது போலவே இரு பகுதிகளுக்கும் இடையே வா்த்த ஒருங்கிணைப்பைத் தொடா்வதா என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இரு பகுதிகளுக்கும் இடையே வா்த்தகப் பிரிவினை ஏற்பட்டால் அது பிராந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் இரு பகுதிகளுக்கும் இடையே வா்த்தக ஒருங்கிணைப்பு தொடா்ந்தால், அது தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என்று பெரும்பாலான பிரிட்டன் எம்.பி.க்கள் கருதுகின்றனா்.

    இதனால், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் தொடர வேண்டிய வா்த்தக உறவை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த நிலையில், இது தொடா்பான புதிய பரிசீலனை திட்ட அறிக்கையை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஐரோப்பிய யூனியனிடம் சமா்ப்பித்தாா். எனினும், 44 பக்கங்கள் அடங்கிய அந்த திட்ட அறிக்கையில், 7 பக்கங்கள் மட்டுமே பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், வரைவு திட்ட அறிக்கையை பிரிட்டன் முழுமையாக வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தற்போது வலியுறுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai