27-ஆவது திருமண நாள் கொண்டாடிய ஒபாமா தம்பதி

27-ஆவது திருமண நாள் கொண்டாடிய ஒபாமா தம்பதி

பாரக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஒபாமா ஆகியோர் தங்களது 27-ஆவது திருமண நாளை வியாழக்கிழமை கொண்டாடினர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஒபாமா ஆகியோர் தங்களது 27-ஆவது திருமண நாளை வியாழக்கிழமை கொண்டாடினர்.

இவர்களுக்கு கடந்த 1991-ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி சிகாகோவில் திருமணம் நடைபெற்றது. ஒபாமா தம்பதிக்கு மலியா ஆன் மற்றும் சாஷா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஒபாமா தம்பதியர் தங்களுக்கே உரிய பாணியில் 27-ஆவது திருமண நாளை கொண்டாடினர். தங்களை இணைத்த அந்த அதிசயத் தருணத்தை இன்று வரை உணர்வதாக தெரிவித்துள்ளனர். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்பெற்ற பீடில்ஸ் பாடல் வரிகளைப் பகிர்ந்த பாரக் ஒபாமா, 27 வருட திருமண வாழ்வில் இணைந்து பயணித்ததற்கு தனது மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

கடந்த 27 வருடங்களுக்கு முன்பு சவால் நிறைந்த வாழ்க்கையை எனக்கு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாரக் நிறைவேற்றியுள்ளார். எங்கள் வாழ்வில் அடுத்து என்ன? எனும் தேடல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என மிட்செலும் தனபங்குக்கு காதலை வெளிபடுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com