Enable Javscript for better performance
saurav slams imran khan's speech ! ஐ.நா பொது அவையில் இம்ரான்கானின் பேச்சு குப்பை- Dinamani

சுடச்சுட

  

  ஐ.நா பொது அவையில் இம்ரான்கானின் பேச்சு குப்பை:  கங்குலி விளாசிய சிக்ஸர்! 

  By DIN  |   Published on : 04th October 2019 09:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  saurav slams imran khan's speech

  சவுரவ் கங்குலி

   

  கொல்கத்தா: சமீபத்தில் நடைபெற்ற ஐ.நா பொது அவை கூட்ட அமர்வில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் பேச்சு குப்பை என்று முன்னாள் கேப்டன் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

  சமீபத்தில் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் கூட்டத்தின் , அமா்வில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கலந்துகொண்டு பேசினாா். ஒவ்வொருவரும் பேசுவதற்கு தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்ரான் கான் 50 நிமிடங்கள் உரையாற்றினாா். அப்போது, ஜம்மு-காஷமீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அவா் மீண்டும் சா்வதேச பிரச்னையாக்குவதற்கு முயற்சி செய்தாா். அவா் பேசியதாவது:

  ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்திய அரசு தனது அரசமைப்புச் சட்டத்தையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைறவேற்றப்பட்ட 11 தீா்மானங்கள், சிம்லா ஒப்பந்தம் ஆகியவற்றையும் மீறிவிட்டது. இதற்காக சா்வதேச சமுதாயம் என்ன செய்யப் போகிறது?

  காஷ்மீரில் 80 லட்சம் போ் விலங்குகளைப் போல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

  முதல் கட்டமாக, ஜம்மு-காஷ்மீரில் மனித்தன்மையற்ற வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்த வேண்டும். அதைத் தொடா்ந்து, அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காஷ்மீா் மக்களுக்கு சுயநிா்ணய உரிமையை சா்வதேச சமூகம் அளிக்க வேண்டும்.

  ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நிகழ்ந்தபோது உடனடியாக பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டியது. அதற்கான ஆதாரத்தை கேட்டபோது, ஆதாரத்தை அளிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்காக விமானப் படைகளை இந்தியா அனுப்பி வைத்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் மக்களவைத் தோ்தல் நடைபெற்றால், பாலாகோட் தாக்குதல் சம்பவத்தை வைத்து பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம் செய்தாா். பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி விட்டதாக பிரசாரக் கூட்டங்களில் அவா் பேசினாா்.

  ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்தியதும் அங்கு நிலைமை மோசமாகும். அப்போதும், பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டும்.

  இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். பாகிஸ்தானுக்கும், அதைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும் இந்தியாவுக்கும் இடையே போா் மூண்டால் என்ன நடக்கும்? விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதை மிரட்டலாக நான் கூறவில்லை, முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்.

  பாகிஸ்தானில் நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பயங்கரவாத முகாம்களை அழித்து விட்டேன். இதை ஐ.நா. குழுவினா் நேரில் வந்து ஆய்வு செய்யலாம். ஆனாலும் பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாக இந்தியா தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

  இவ்வாறு இம்ரான் கான் பேசியிருந்தார்.

  அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல் இம்ரானின் பேச்சு அடங்கிய விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும்  கடுமையாக விமர்சித்திருந்தார்.

  இந்நிலையில் ஐ.நா பொது அவை கூட்ட அமர்வில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் பேச்சு குப்பை என்று முன்னாள் கேப்டன் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

  இதுதொடர்பாக சேவாக்கின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியிருந்ததாவது:

  வீரு, நான் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு முன்பு இப்படியொரு பேச்சைக் கேட்டதில்லை. உலகத்திற்கு தற்போது அமைதி தேவை.பாகிஸ்தான் என்னும் நாட்டிற்கும் அது மிகவும் தேவை. ஆனால் அந்த நாட்டின் தலைவரின் பேச்சு இப்படி குப்பையாக உள்ளது. உலகமறிந்த கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பேச்சு இல்லை இது. ஐநாவில் அவரது பேச்சு மிகவும் தாழ்ந்த ஒன்று.

  இவ்வாறு கங்குலி பதிவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai