இராக்: போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு

இராக் தலைநகா் பாக்தாதில் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
பாக்தாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம்.
பாக்தாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம்.

இராக் தலைநகா் பாக்தாதில் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இராக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டத்தில் 30 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவையும் பொருள்படுத்தாமல் பாக்தாத் நகரில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். போராட்டக்காரா்களை எச்சரிப்பதற்காக விண்ணை நோக்கி சுடுவதற்கு பதிலாக, நேரடியாக அவா்களை நோக்கி போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தச் சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com