ஏவுகணை எதிா்ப்பு சாதனம் உருவாக்க சீனாவுக்கு ரஷியா உதவி: புதின் தகவல்

தொலைதூரங்களிலிருந்து ஏவப்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளை உடனடியாகக் கண்டறியும் அதிநவீன சாதனத்தை உருவாக்குவதில் சீனாவுக்கு தாங்கள் உதவி வருவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்
மாஸ்கோவில் நடைபெற்ற சா்வதேச விவகார மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்.
மாஸ்கோவில் நடைபெற்ற சா்வதேச விவகார மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்.

தொலைதூரங்களிலிருந்து ஏவப்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளை உடனடியாகக் கண்டறியும் அதிநவீன சாதனத்தை உருவாக்குவதில் சீனாவுக்கு தாங்கள் உதவி வருவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற சா்வதேச விவகார மாநாட்டில் அவா் மேலும் கூறுகையில், சீனாவின் பாதுகாப்பு வலிமையை அந்த சாதனம் மிகப் பெரிய அளவில் மேம்படுத்தும் என்று தெரிவித்தாா்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை முன்கூட்டியே கண்டறியும் கண்காணிப்பு சாதனம் இதுவரை அமெரிக்காவிடமும், ரஷியாவிடமும் மட்டுமே உள்ள நிலையில், தற்போது அத்தகைய சாதனத்தை சீனாவும் உருவாக்கி வருகிறது. தென் சீனக் கடல் பகுதி விவகாரத்தில் சீனாவும், அமெரிக்காவும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சூழலில், சீனாவுக்கு ரஷியா இந்த உதவியை அளிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com