Enable Javscript for better performance
சீன-வட கொரியத் தூதாண்மையுறவின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு இரு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    சீன-வட கொரியத் தூதாண்மையுறவின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு இரு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து

    By DIN  |   Published on : 06th October 2019 10:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    07e75c7c-740b-4e80-9c47-f0f72faadad2


    சீன-வட கொரியத் தூதாண்மையுறவின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வட கொரிய தொழிலாளர் கட்சியின் ஆணையத் தலைவரும், தேசிய அரசவையின் தலைவருமான கிம் ஜுங் உன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

    ஷிச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில், சீன-வட கொரிய பாரம்பரிய நட்பு, இரு கட்சிகளுக்கும், இரு நாடுகளுக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் பொதுச் செல்வமாகும். இரு நாட்டு வளர்ச்சி மற்றும் மக்களுக்கு நலன் தரும் வகையில், வட கொரியாவுடன் இணைந்து பாடுபட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    கிம் ஜுங் உன் தனது வாழ்த்துச் செய்தியில், ஷிச்சின்பிங்குடன் இணைந்து நட்பு மற்றும் ஒற்றுமையைப் பயன்படுத்தி, சோஷலிச லட்சியத்தையும், கொரிய தீபகற்பம் மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் உறுதியாகப் பேணிகாக்க வட கொரியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    தகவல்: சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai