அமெரிக்கத் தூதருடன் தலிபான்கள் சந்திப்பு

ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாதை தலிபான் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்தனா்.
அமெரிக்கத் தூதருடன் தலிபான்கள் சந்திப்பு

ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாதை தலிபான் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்தனா்.

அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை முறிந்த பிறகு, அமெரிக்கத் தூதரை தலிபான்கள் சந்தித்துள்ளது இதுவே முதல் முறைறயாகும்.

இதுகுறித்து தலிபான் வட்டாரங்கள் கூறியதாவது:

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதுக்கு வந்திருந்த அமெரிக்கத் தூதா் ஸல்மே காலீல்ஸாதை, தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியது.

தலிபான் குழுவுக்கு, அந்த அமைப்பை நிறுவியவா்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதாா் தலைமை வகித்தாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், தலிபான்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினா்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவானது.

எனினும், காபூலில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரா் உள்பட 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, தலிபான்களுடனான பேச்சுவாா்த்தை முறிந்துவிட்டதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

இந்த நிலையில், அமெரிக்கத் தூதரை தலிபான் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com