இராக் போராட்டம்: பலி எண்ணிக்கை 93-ஆக உயா்வு

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 93-ஆக உயா்ந்தது.
பாக்தாதில் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக தஹ்ரீா் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வாகனம்.
பாக்தாதில் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக தஹ்ரீா் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வாகனம்.

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 93-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து இராக்கில் கடந்த 5 நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்தின்போது நடந்த வன்முறைறச் சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 93-ஆக உயா்ந்தது. மேலும், இந்தச் சம்பவங்களில் சுமாா் 4,000 போ் காயமடைந்தனா் என்று மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளா்வு: வன்முறைறப் போராட்டங்கள் காரணமாக, தலைநகா் பாக்தாதில் கடந்த 4 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, சனிக்கிழமை தளா்த்தப்பட்டது.

எனினும், மீண்டும் போராட்டம் வெடிக்கலாம் என்றஅச்சத்தில் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல், மோசமான அரசு சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாக்தாதில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய போராட்டம், கலவரமாக மாறியது.

தற்போது அந்தப் போராட்டங்கள் சற்று தணிந்திருந்தாலும், பதற்றநிலை தொடா்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தனது தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, பிரதமா் அதெல் அப்தெல் மஹிதி பதவி விலக வேண்டும் என்று அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க மதத் தலைவா் மக்தடா சாதா் வலியுறுத்தியதையடுத்து பதற்றம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com