சீனாவின் புத்தாக்கத் தொழில் நுட்ப ஆற்றல்!

சீனாவின் அறிவுசார் கண்டுபிடிப்புக் காப்புரிமை தொடர்பான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் காப்புரிமை பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் உலகளவில் முதல் இடத்தில் உள்ளன.
சீனாவின் புத்தாக்கத் தொழில் நுட்ப ஆற்றல்!


சீனாவின் அறிவுசார் கண்டுபிடிப்புக் காப்புரிமை தொடர்பான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் காப்புரிமை பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் உலகளவில் முதல் இடத்தில் உள்ளன. 

உலக அறிவுசார் காப்புரிமை அமைப்பு வெளியிட்ட 2019ஆம் ஆண்டு உலக புத்தாக்கக் குறியீட்டு எண் வரிசைப் பட்டியலில், சீனா தொடர்ந்து 5 ஆண்டுகளாக முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது, இந்த வரிசைப் பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது.

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இடைவிடாமல் முன்னேற்றங்களைப் பெற்று வருவது மட்டுமின்றி, குவாண்டம் செய்தித் தொடர்பு, மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணம், சந்திரமண்டல ஆய்வு, வழிக்காட்டுச் செயற்கைக்கோள் உள்ளிட்ட துறைகளில் சீனா முக்கிய சாதனைகளையும் பெற்றுள்ளது. 

சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் பின்தங்கிய நிலைமையிலிருந்து, விரைவாக வளர்ந்து வரும் நிலைக்கு உயர்ந்துள்ளது. சில துறைகளில் சீனா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது. அதோடு, உலகப் புத்தாக்கத் துறையில் சீனாமென்மேலும் முக்கியப் பங்காற்றி வருகின்றது.

உலகளவில் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவின் ஒட்டுமொத்த அறிவியல் தொழில் நுட்ப நிலைமை, வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் ஓர் இடைவெளி  இருப்பது உண்மையே. புத்தாக்கத் துறையில் சீனா மாபெரும் வளர்ச்சி ஆற்றலை கொண்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com