சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சீனாவின் முயற்சி

இவ்வாண்டின் பிப்ரவரியில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட தரவுகளின்படி, 20 ஆண்டுகளுக்கு முந்தைய புவியுடன் தற்போதைய புவியை ஒப்பிட்டால் தற்போதுள்ள பசுமை அதிகரித்திருப்பது தெரிய வரு
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சீனாவின் முயற்சி

இவ்வாண்டின் பிப்ரவரியில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட தரவுகளின்படி, 20 ஆண்டுகளுக்கு முந்தைய புவியுடன் தற்போதைய புவியை ஒப்பிட்டால் தற்போதுள்ள பசுமை அதிகரித்திருப்பது தெரிய வரும். சீனாவிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மரம் நடுதல் காடு வளர்ப்பு மற்றும் தீவிர வேளாண்மை ஆகிய நடவடிக்கைகளே, இதற்குக் காரணமாகும் என்று நாசா கூறியது. 

2000-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முழு உலகளவிலும் பசுமை மயமாக்கத்தின் மொத்த அளவு 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். இதில், சீனாவிலுள்ள தாவரங்களின் அதிகரிப்பு அளவு, உலகளவில் 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்து முதல் இடத்தைப் பிடித்தது. சீனாவின் பங்கு விகித்ததில் 42 விழுக்காடு, மரம் நடுதல் மற்றும் காடு வளர்ப்பால் வந்தவை.

சுற்றுச்சூழலைப் பசுமை மயமாக்குவதில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட வரைவு அலுவலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளன. சீனாவின் வடமேற்கு, ஹுவா பெய் மற்றும் வடக்கிழக்கு ஆகிய மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் “சான் பெய்” எனும் பாதுகாப்பு வனங்களின் கட்டுமானம் உலகளவில் பாலைவனப் பிரதேசங்களில் இயற்கைச் சூழல் பொருளாதாரத்துக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்று இவ்வலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டின் செப்டம்பர் திங்கள், ”புவி காவலர்“ எனும் ஐ.நாவின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதைச் சேர்ந்த ஊக்கம் மற்றும் செயல்பாட்டு விருது, சீனாவின் இணைய வழி சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமான“ஏன்ட் ஃபாரஸ்ட்” செயலி பெற்றுள்ளது. இத்துறையில் சீனா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இவ்விருதைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உயிரினச் சுற்றுச்சூழலை மேம்படுத்தி, தூய்மையான வளர்ச்சியை நனவாக்குவதில் சீனா பெற்றுள்ள சாதனைகள், அரசின் நெடுநோக்குத் திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தொடர்ந்து அதிகரித்தல் முதலியவற்றிலிருந்து வந்தவையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சீனாவின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. உயிரின வாழ்க்கை நாகரிகம் தொடர்பாக, அரசியல் அமைப்புச் சட்டத்திலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில், இயற்கைச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக, 9 சட்டங்களையும் 20 விதிகளையும் சீனா அடுத்தடுத்து வகுத்துள்ளது. காற்று, நீர், நிலம், இயற்கைச் சூழல், அணு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுடன் இந்தச் சட்டங்களும் விதிகளும் தொடர்புடையவை. தவிர, 2015-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் கேட்டினை விளைவிக்கும் செயலைக் கட்டுப்படுத்துவதில் தெளிவான சாதனைகளைப் பெற்று வருகின்றது.

தவிரவும், சீனா பெற்றுள்ள பசுமை வளர்ச்சி சாதனை, பரந்த அளவில் சீன மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கெடுப்பதைக் காட்டுகின்றது. எடுத்துக்காட்டாக,இவ்வாண்டு ஆகஸ்ட் வரை,  ஐ.நாவின் விருதைப் பெற்ற ”ஏன்ட் ஃபாரஸ்ட்” செயலி, சுமார் 50 கோடி சீனர்களைக் கரி குறைந்த வாழ்க்கையில் பங்கெடுக்கச் செய்துள்ளது. 

காலநிலை மாற்றம், மனித குலம் கூட்டாக எதிர்நோக்குகின்ற அறைக்கூவல் ஆகும். இயற்கைச் சூழல் கட்டுமானத்துக்கு, பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சி தேவைப்படுகின்றது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா எப்போதும் போலவே, சர்வதேச ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகின்றது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 30-க்கும் அதிகமான பல தரப்பு பொது ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் சீனா செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை பற்றிய ஐ.நா உச்சி மாநாட்டில், ஐ.நா காலநிலை மாற்றக் கட்டுக்கோப்புப் பொது ஒப்பந்தத்தையும் பாரிஸ் உடன்படிக்கையையும் உணர்வுப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் என்ற வாக்குறுதியை சீனா அளித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com