
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில், நேபாள நாடாளுமன்ற முன்னாள் தலைவா் கிருஷ்ண பகதூா் மஹாராவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நாடாளுமன்றச் செயலகத்தில் பணியாற்றி வரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தனது அவைத் தலைவா் பதவியை பகதூா் மஹாரா ராஜிநாமா செய்த நிலையில், அவா் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...