முப்பத்தைந்து ஆண்டுகள்.. 93 கொலைகள்: அமெரிக்காவின் கொடூர 'சீரியல் கில்லர்'! 

முப்பத்தைந்து ஆண்டுகளில் 93 கொலைகள் செய்த அமெரிக்காவின் கொடூர 'சீரியல் கில்லர்' பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சாமுவேல் மெக்டவல்
சாமுவேல் மெக்டவல்

வாஷிங்டன்: முப்பத்தைந்து ஆண்டுகளில் 93 கொலைகள் செய்த அமெரிக்காவின் கொடூர 'சீரியல் கில்லர்' பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் மெக்டவல் (79) . அவரது உயரம் காரணமாக அவரை 'சாமுவேல் லிட்டில்' என்றும் அழைக்கின்றனர்     . முன்னாள் குத்துச் சண்டை வீரரான இவர் மூன்று பெண்களை கொலை செய்தது தொடர்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 1987-ஆம் ஆண்டு முதல் 1989 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூன்று பெண்களைக் கொலை செய்தது உறுதியானது. நீண்ட விசாரணையின் முடிவில் 2014-ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.       

மேலும் சில சந்தேக மரணங்கள் தொடர்பாக சிறையில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் அதிரவைக்கும் உண்மைகள் வெளியாகின. அதன்படி 1970-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பேரை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார். அதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறிய விபரங்களை சோதனை செய்த காவல்துறையினர் அதில் 50 கொலைகளை அவர் நிகழ்த்தியதை உறுதி செய்துள்ளனர். ஆனால் அவர் அளித்த வாக்குமூலத்தில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் உண்மைதான் என்று போலீசார் நமபிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரங்ககளை சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

சாமுவேல் அளித்த வாக்குமூலத்தில் உள்ள பெரும்பாலான மரண வழக்குகள் அதிக அளவு போதை மருந்து உட்கொண்டதால் நிகழ்ந்த மரணங்கள், விபத்தினால் நிகழ்ந்த மரணங்கள் அல்லது காரணம் தெரியாத மரணங்கள் என்று காவல்துறை பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

சாமுவேல் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் விடியோ பதிவுகள், தான் கொலை செய்த பெண்களின் படங்கள் என்று சிறையில் இருந்த சமயம் சாமுவேல் வரைந்த ஓவியங்கள் அடங்கிய பெரும்பாலான விபரங்களை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அனைத்தையும் பதிவேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com