சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகளுக்கு பெயர் வைக்க நீங்க ரெடியா? பொதுமக்களுக்கு போட்டி அறிவிப்பு 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனி கிரகத்தின் 20  புதிய நிலவுகளுக்கு பெயர் வைப்பதற்காக பொதுமக்களுக்கு ஓர் போட்டி அறிவிகைப்பட உள்ளது.
சனி கிரகத்தின்  20 புதிய நிலவுகள்
சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள்

நியூயார்க்: புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனி கிரகத்தின் 20  புதிய நிலவுகளுக்கு பெயர் வைப்பதற்காக பொதுமக்களுக்கு ஓர் போட்டி அறிவிகைப்பட உள்ளது.

அமெரிக்காவின் ‘கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் சனிக்கிரகத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.

சூரிய மண்டலத்தில் ஆறாவதான சனி கிரகத்தை தற்போது மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக திகழந்து வந்த வியாழனை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி சனி கிரகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சனி கிரகத்திற்கு எதிரான பாதையில் சுற்றும் துணைக் கோள்கள் ஒரு முறை சனி கிரகத்தை சுற்றி வர 3 வருட காலமும், சனி கிரக பாதையில் சுற்றும் துணைக் கோள்களில் இரண்டு வருட காலம் எடுத்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக நிலவுகளை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது. எனினும், அளவில் மிகப்பெரிய கிரகமான வியாழனே இன்னும் மிகப்பெரிய நிலவுகளைக் கொண்டுள்ளது. இது ஜுபிடருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. உதாரணமாக வியாழனின் பெரிய நிலவான Ganymede பூமியின் பாதி அளவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக கண்டுபிடிப்புக் குழுவை வழிநடத்திய கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் ஸ்காட் ஷெப்பர்ட் கூறுகையில்,'இந்தப் புதிய நிலவுகள் ஹவாயில் உள்ள மவுனா கே மலையில் பொருத்தப்பட்டுள்ள சுபரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. சனியின் 20 புதிய நிலவுகள் மிகக் சிறியது, ஒவ்வொன்றும் 5 கி.மீ விட்டம் கொண்டவை. சனியை இன்னும் 100 சிறிய நிலவுகள் சுற்றி வரக்கூடும், அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி, மாபெரும் கிரகங்களைச் சுற்றியுள்ள சிறிய நிலவுகளை கண்டுபிடித்து வருகிறோம்' என்று தெரிவித்துளார்.

அதேசமயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளுக்கு பெயரிடுவதற்காக பொதுமக்களுக்கு போட்டி ஒன்றை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com