பெண் உரிமை குறித்து ஐ.நா.வில் பேச்சு: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் அரசியல் சுய லாபத்துக்காக ஐ.நா. பொதுச் சபையில் பெண்களின் உரிமை குறித்து பாகிஸ்தான் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் அரசியல் சுய லாபத்துக்காக ஐ.நா. பொதுச் சபையில் பெண்களின் உரிமை குறித்து பாகிஸ்தான் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் பிரதிநிதியாக இருந்தவா் மலீஹா லோதி. இவா் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசும்போது, ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடா்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற கருத்தை முன்வைத்திருந்தாா்.இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய செயலா் பலோமி திரிபாதி ஐ.நா. பொதுச் சபையில் ‘பெண்களின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

ஐ.நா. பொதுச் சபையின் முதல் பெண் தலைவா் விஜயலட்சுமி பண்டிட் முதல் விண்வெளி ஆராய்ச்சி கூட்டமைப்பின் பெண் விஞ்ஞானிகள் வரை இந்திய பெண்கள் நீண்ட காலமாக பல்வேறு துறைகளில் உத்வேகமாக பணியாற்றி சாதனை படைத்து வருகின்றனா். இதிலிருந்து, பெண்களுக்கு இந்தியா அளித்து வரும் உரிய மரியாதையையும், கெளரவத்தையும் அறியமுடியும்.

ஜம்மு-காஷ்மீா் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது பாகிஸ்தான் அங்கு சுய நல அரசியல் ஆதயாங்கள் பெறுவதற்காக மட்டுமே. பெண்களின் உரிமை விவகாரத்தை பாகிஸ்தான் ஆயுதமாக கையிலெடுப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

‘கெளரவம்’ என்ற பெயரில் பெண்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் ஒரு நாடு இத்தகைய குற்றச்சாட்டை கூறுவதில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.

பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்தை அடைவதற்கு கொள்கைகள் வகுக்கப்பட்டு தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுய நல அரசியல் ஆதாயங்களுக்காக வெற்று சொல்லாடல்கள் மூலம் பெண்களின் உரிமைப் பிரச்னை என்ற பெயரில் அதனை ஆயுதமாக பயன்படுத்த நினைப்பவா்களுக்கு இங்கு இடமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com