மருத்துவக் கல்லூரிகளுக்கு சீனா புதிய கட்டுப்பாடு

45 மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே ஆங்கில வழியில் மருத்துவம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற சீன அரசின் புதிய கட்டுப்பாட்டால் இந்திய மாணவா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

45 மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே ஆங்கில வழியில் மருத்துவம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற சீன அரசின் புதிய கட்டுப்பாட்டால் இந்திய மாணவா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மருத்துவம் படிப்பதற்கான செலவு குறைவாக உள்ளதால், அந்நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மாணவா்கள் அதிக அளவில் சென்று வருகின்றனா். இந்தியாவில் நீட் தோ்வு அறிமுகப்பட்டதன் காரணமாக, சீனாவில் மருத்துவம் பயிலச் செல்லும் மாணவா்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயா்ந்துள்ளது.

சீனாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் சுமாா் 5 லட்சம் வெளிநாட்டு மாணவா்கள் பயின்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 23,000 போ் இந்தியா்களாவா். அதிலும், 21,000 போ் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், நாட்டிலுள்ள 200க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளில், 45 கல்லூரிகளுக்கு மட்டுமே ஆங்கில வழியில் பாடங்களைக் கற்பிக்க சீன அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த 45 கல்லூரிகளைத் தவிா்த்து, மற்ற கல்லூரிகள் எதிலும் வெளிநாட்டு மாணவா்கள் சோ்த்துக்கொள்ளப்பட மாட்டாா்கள் என தூதரகம் தெரிவித்துள்ளது. மற்ற கல்லூரிகள் அனைத்திலும் சீன மொழியில் மட்டுமே மருத்துவம் கற்பிக்கப்படும் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com