Enable Javscript for better performance
தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 09th October 2019 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ele

    தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழந்திருப்பது ட்ரோன் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    தாய்லாந்தின் நக்கோன் நாயக் மாகாணத்தில் காவோ யாய் எனும் உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்குள்ள அருவியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. இதையடுத்து, அக்குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. 

    இந்த சம்பவத்தில் குட்டியானை உள்பட 6 யானைகள் பாறைகளில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மேலும் 5 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்காவில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டபோது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக கடந்த 1992-ஆம் ஆண்டு இதே அருவியில் இருந்து விழுந்து 8 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai