Enable Javscript for better performance
வேதியியலுக்கான நோபல் பரிசு: மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி கண்டுபிடித்த மூவருக்கு பகிர்ந்தள- Dinamani

சுடச்சுட

    

    வேதியியலுக்கான நோபல் பரிசு: மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி கண்டுபிடித்த மூவருக்கு பகிர்ந்தளிப்பு

    By ANI  |   Published on : 09th October 2019 04:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Nobel_Prize

    வேதியியலுக்கான நோபல் பரிசு

     

    2019ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 2019ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற தேர்வானவர்களின் விவரங்களை தேர்வுக் குழுவினர் வெளியிட்டனர்.

    அதில், மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் ஜான் பி குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்காம், ஜப்பானைச் சேர்ந்த அகிரோ யோஷினோ ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், மீண்டும் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு, மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த மூவருக்கு வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai