அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம்: இராக் ராணுவம் ஒப்புதல்

இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் செய்ததாக அந்த நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டது.
அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம்: இராக் ராணுவம் ஒப்புதல்

இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் செய்ததாக அந்த நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டது.

அந்தப் போராட்டத்தில் 100 பேருக்கும் மேல் உயிரிழந்தது தொடா்பாக பாதுகாப்புப் படையினா் மீது சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், ராணுவம் இவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினா் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் மேற்கொண்டது உண்மையே. அதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

கலவரத் தடுப்புப் பணிகளில் ராணுவத்துக்குப் பதிலாக தேசிய காவல்துறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக புலனாய்வுத் துறையினா் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிபா் அதெல் அப்தெல் மஹிதி உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக இராக்கில் கடந்த வாரம் தொடங்கிய போராட்டம், வன்முறையாக வெடித்தது; இதில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com