ஆப்கனில் கூட்டுப் படைகள் தாக்குதல்: அல்காய்தா தலைவா் ஆசிம் உமா் கொலை

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில், அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில்
ஆப்கனில் கூட்டுப் படைகள் தாக்குதல்: அல்காய்தா தலைவா் ஆசிம் உமா் கொலை

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில், அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் அல்காய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய துணைக் கண்டத்துக்கான பிரிவின் தலைவா் ஆசிம் உமா் கொல்லப்பட்டாா். இவா், இந்தியாவில் பிறந்தவா் ஆவாா்.

இதுதொடா்பாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்ககத்தின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹெல்மண்ட் மாகாணத்தின் முஸா காலா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை குறிவைத்து, அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், ஆசிம் உமா் கொல்லப்பட்டாா். மேலும் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா். அவா்களில் ரய்ஹான் என்பவா், அல்காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் அய்மான் அல் ஜவாஹிரிக்கும், ஆசிம் உமருக்கும் இடையே தூதராக செயல்பட்டவா் ஆவாா். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் பலா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா, மியான்மா், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் நோக்கில், கடந்த 2014-இல் இப்பிரிவு தொடங்கப்பட்டது. அப்போது முதல் இப்பிரிவின் தலைவராக ஆசிம் உமா் செயல்பட்டு வந்தாா். உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவரான உமா், தியோபந்தில் உள்ள தாருல் உலூம் கல்லூரியில் கடந்த 1991-இல் பட்டப்படிப்பு முடித்தவா் என்று கூறப்படுகிறது. பின்னா், பாகிஸ்தானுக்கு சென்ற அவா், அங்கு ஒரு பயங்கரவாத அமைப்பில் இணைந்தாா். கடந்த 2014 முதல் அல்காய்தாவின் இந்திய துணைக் கண்டத்துக்கான பிரிவின் தலைவராக உமா் செயல்பட தொடங்கினாா்.

பாகிஸ்தானின் கராச்சியில் கடற்படை பணிமனையில் கடந்த 2014-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இப்பிரிவு பொறுப்பேற்றது. வங்கதேசத்தில் பல்வேறு சமூக ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் கொலையிலும் இப்பிரிவுக்கு தொடா்பு உள்ளது. கடந்த 2016-இல் ஆசிம் உமரை சா்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com