ஆப்கானிஸ்தான்: அமெரிக்க தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கடந்த மே மாதம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்: அமெரிக்க தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கடந்த மே மாதம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கன் விவகாரத்துக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஏஎம்ஏ) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் பல்வேறு போதை மருந்து தயாரிப்புக் கூடங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படையினா் கடந்த மே மாதம் வான்வழித் தாக்குதல் நடத்தினா்.

‘மெத்தாம்பெடாமைன்’ என்ற போதை மருந்தை அந்தக் கூடங்களில் தலிபான்கள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மருந்துத் தயாரிப்பு ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

அந்தத் தாக்குதல்களில் கணிசமான பொதுமக்கள் உயிரிழந்ததாக எழுந்த புகாரையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது என்று யுஎன்ஏஎம்ஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த புள்ளிவிவரம் குறித்து அமெரிக்க ராணுவம் சந்தேகம் எழுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com