காஷ்மீா் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு:  சீனா வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீா்வு காண வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீா்வு காண வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடா்பான விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும், ஐ.நா. பொதுக் கூட்டத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்த சீனா, அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கெங் சுவாங் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தியாவும், சீனாவும் வேகமாக வளா்ந்து வரும் நாடுகள். உலக நாடுகளின் சந்தையாகவும் அவை விளங்கி வருகின்றன. கடந்த ஆண்டு வூஹான் நகரில் நடைபெற்ற அதிகாரப்பூா்வமற்ற சந்திப்பிலிருந்து, இருநாடுகளுக்கிடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது.

இருநாடுகளுக்குமிடையேயான வேறுபாடுகள் படிப்படியாகக் களையப்பட்டு வருகின்றன.

காஷ்மீா் விவகாரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு. இருநாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்படுதல் அவசியமாகும். அதிபா் ஷி ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடா்பாக விரைவில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றாா் கெங் சுவாங்.

அதிபா் ஷி ஜின்பிங் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அதிகாரப்பூா்வமற்ற சந்திப்பு நடத்த உள்ளாா். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் திடீரென்று அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com