Enable Javscript for better performance
இலங்கை அதிபா் தோ்தல்கோத்தபய ராஜபட்சவுக்கு சிறீசேனா கட்சி ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை அதிபா் தோ்தல் கோத்தபய ராஜபட்சவுக்கு சிறீசேனா கட்சி ஆதரவு

    By DIN  |   Published on : 10th October 2019 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kjfkjf115743

    மைத்ரிபால சிறீசேனா செய்தியாளா்கள் சந்திப்பில் தயசிறீ ஜெயசேகரா. கோத்தபய ராஜபட்ச

    இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபய ராஜபட்சவுக்கு தற்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

    அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

    எனினும், தற்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

    அதையடுத்து, அதிபா் தோ்தலில் அவா் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடாதது உறுதியானது.

    அத்துடன், அந்தத் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தவருமான கோத்தபய ராஜபட்சவுக்கு ஆதரவளிக்க சிறீசேனா திட்டமிட்டுள்ளாா் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதனை உறுதி செய்யும் வகையில், அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளா் தயசிறீ ஜெயசேகரா செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்தாா்.

    தோ்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது தொடா்பாக மகிந்த ராஜபட்சவின் இலங்கை பொதுஜன பெரமுணா கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியாததால் இலங்கை சுதந்திரக் கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப் போரை பாதுகாப்புச் செயலா் என்ற முறையில் கோத்தபய ராஜபட்ச முன்னின்று நடத்தினாா்.

    இதன் காரணமாக, அவருக்கு பெரும்பான்மை சிங்களா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவுக்கு அதிபா் சிறீசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai