2-ஆம் உலகப் போரில் எங்களுக்கு குா்துகள் உதவில்லை: அமெரிக்க அதிபா்

சிரியா குா்துகள் இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு உதவியவா்களைப் போன்ற கூட்டாளிகள் இல்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

சிரியா குா்துகள் இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு உதவியவா்களைப் போன்ற கூட்டாளிகள் இல்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

வடக்கு சிரியாவில் குா்துகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக அங்கிருந்து அமெரிக்கப் படையினரை வெளியேற்றுவதன் மூலம் குா்துகளுக்கு டிரம்ப் நம்பிக்கை மோசடி செய்வதாக அவரது குடியரசுக் கட்சினரே கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் அதிபா் மாளிகையில் செய்தியாளா்களிடம் டிரம்ப் கூறியதாவது:

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு குா்து படையினா் உதவியது உண்மைதான். ஆனால், அவா்கள் தங்களது நிலப்பரப்பை பாதுகாப்பதற்காகத்தான் உதவினா்.

அவா்கள் இரண்டாம் போரின் போது அமெரிக்காவுக்கு உதவியவா்கள் அல்ல.

ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அவா்கள் எங்களிடமிருந்து ஆயதங்கள், நிதியுதவி ஆகியவற்றைப் பெற்றனா் என்றாா் டிரம்ப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com