சீன-இந்திய வர்த்தகத்தில் முன்னேற்றம்

சீனா மற்றும் தெற்காசிய நாடுகளின் மொத்த வர்த்தகத் தொகையிலும், இது சுமார் 70 விழுக்காடு பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன-இந்திய வர்த்தகத்தில் முன்னேற்றம்

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2018-ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகத் தொகை 9,550 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது வரலாற்றில் மிக அதிக அளவிலான பதிவாகும். சீனா மற்றும் தெற்காசிய நாடுகளின் மொத்த வர்த்தகத் தொகையிலும், இது சுமார் 70 விழுக்காடு பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்ளது. இயந்திர மற்றும் மின்பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள், நெசவுப் பொருட்கள், தானியங்கி தரவு செயலாக்க உபகரணங்கள் முதலியவை, சீனா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய வணிகப் பொருட்களாகும். அதேபோல், வைரம், இயந்திர மற்றும் மின்பொருட்கள், இரும்புத் தாது முதலியவை இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் முக்கியமான பொருள்களாகும்.

இவ்வாண்டின் ஜுலை வரை, இந்தியாவுக்கான சீனத் தொழில் நிறுவனங்களின் மொத்த முதலீட்டுத் தொகை, 840கோடி அமெரிக்க டாலராகும். இது,தெற்காசிய நாடுகளுக்கான முதலீட்டு தொகையில், மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. அதே போல், இவ்வாண்டின் ஆகஸ்ட் வரை, சீனாவுக்கான இந்தியாவின் முதலீட்டுத் தொகை 92கோடி அமெரிக்க டாலராகும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com