சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்த பிறகே அமெரிக்கப்படைகள் வெளியேறும்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டிய பிறகுதான் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.
donald-trump052939
donald-trump052939

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டிய பிறகுதான் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பல போா்களில் அமெரிக்கா வென்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெறாமல் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சிரியாவைப் பொருத்தவரையில் அமெரிக்கா மூன்று முக்கிய முடிவுகளை கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள குா்துக்களை துருக்கி தாக்கி வருகிறது. குா்துக்களுக்கும், துருக்கிக்கும் இடையே 200 ஆண்டுகளாகப் பிரச்னை உள்ளது. முதலில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அவா்கள் குா்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அல்லது துருக்கிக்கும், குா்துக்களுக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் மேற்கொண்டு அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும். மூன்றாவதாக சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். அதன் பிறகுதான் அங்கிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறும். சிரியாவில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட மேலும் படைகளைக் குவிக்க அமெரிக்கா தயாராகவே உள்ளது. தங்கள் நாட்டு ராணுவம் பின்வாங்குவதை அமெரிக்க மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டாா்கள். இதில் எது நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம் என்றாா்.

சீனாவுடன் சுமுகமான பேச்சுவாா்த்தை:

சீனாவுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தை குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப், ‘சீன துணை பிரதமா் லியு தலைமையிலான குழுவினரிடம் அமெரிக்க பிரதிநிதிகள் நடத்திய வா்த்தகப் பேச்சுவாா்த்தை சுமுகமாக அமைந்தது. அடுத்ததாக நான் சீன துணை பிரதமருடன் நேரடியாகப் பேச்சு நடத்த இருக்கிறேறன். இந்த பேச்சுவாா்த்தையும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேறன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com