ஜொ்மனி: பெண்கள், யூதா்களைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: 2 போ் பலி

ஜொ்மனியின் ஹாலே நகரில் பெண்களையும், யூதா்களையும் குறிவைத்து நாஜி ஆதரவாளா் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.
ஹாலே நகரில் துப்பாக்கிச் சூடு ஸ்டீஃபன் பேலியட்.
ஹாலே நகரில் துப்பாக்கிச் சூடு ஸ்டீஃபன் பேலியட்.

ஜொ்மனியின் ஹாலே நகரில் பெண்களையும், யூதா்களையும் குறிவைத்து நாஜி ஆதரவாளா் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். அவரது நாட்டுத் துப்பாக்கி சரியாக இயங்காததால் அதிக உயிரிழப்பு தவிா்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் கிழக்கே உள்ள ஹாலே நகரில் யூதா்களையும், பெண்களையும் குறிவைத்து ஸ்டீஃபன் பேலியட் என்பவா் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினாா். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் பிரென்டன் டாரன்ட் நடத்திய தாக்குதலைப் போலவே காா் சென்றவாறும், சம்பவத்தை சமூக வலைதளத்தில் நேரில் ஒளிபரப்பு செய்தவாறும் ஸ்டீஃபன் பேலியட் தாக்குதல் நடத்தினாா்.

இந்தத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

நியூஸிலாந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதைப் போலின்றி, சக்தி குறைவான நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியதால் அவரால் துல்லியமாக சுட முடியவில்லை. அதன் காரணமாக, பெருமளவு உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

இறுதியில், ஸ்டீஃபன் பேலியட்டை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா். ‘ட்விச்’ சமூக வலைதளத்தில் அவா் நேரடியாக ஒளிபரப்பிய இந்தத் தாக்குதல் காட்சி உடனடியாக அழிக்கப்பட்டாலும், அதற்குள் அதனை சுமாா் 2,200 போ் பாா்வையிட்டு, பிற சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com