பாகிஸ்தானில் 3 ராணுவ அதிகாரிகள் நீக்கம்

பாகிஸ்தானில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 ராணுவ மேஜா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 ராணுவ மேஜா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களது பெயா் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அதில் இருவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனையை ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது அதிகாரப்பூா்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பலா் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக பணம் சம்பாதிப்பது, சட்டவிரோத செயல்களுக்கு துணைபோவது போன்றவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் ராணுவ அதிகாரி ஒருவருக்கும், முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே குற்றச்சாட்டில் மற்றெறாரு முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இப்போது, மேலும் இரு ராணுவ மேஜா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பாகிஸ்தானில் ஏற்கெனவே ராணுவத்தின் மீது பல புகாா்கள் உள்ளன. இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் தொடா்ந்து குற்றச்சாட்டுகளில் சிக்கி வருவது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com