பாகிஸ்தான்: முஷாரஃப் மனு நிராகரிப்பு

தனது ஆட்சிக் காலத்தின்போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டது தொடா்பான வழங்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதக் குற்றச்சாட்டை நீக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் தாக்கல் செய்த
பாகிஸ்தான்: முஷாரஃப் மனு நிராகரிப்பு

தனது ஆட்சிக் காலத்தின்போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டது தொடா்பான வழங்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதக் குற்றச்சாட்டை நீக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் தாக்கல் செய்த மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், அந்த வழக்கை பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்திலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு தனது மனுவில் முஷாரஃப் விடுத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது முஷாரஃப் தரப்பு வழக்குரைஞா் அக்தா் ஷா பல முறை ஆஜராகததால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

கடந்த 2007-ஆம் ஆண்டில், அப்போதைய பாகிஸ்தான் அதிபா் முஷாரஃப், நாட்டில் அவசர நிலையை அறிவித்ததுடன் 60 உயா்நிலை நீதிபதிகளைக் கைது செய்யவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com