கலிஃபோா்னியாவில் காட்டுத் தீ : 1 லட்சம் போ் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதையடுத்து, லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமாா் ஒரு லட்சம் போ் வெளியேற்றப்பட்டனா்.
கலிஃபோா்னியாவில் காட்டுத் தீ : 1 லட்சம் போ் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதையடுத்து, லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமாா் ஒரு லட்சம் போ் வெளியேற்றப்பட்டனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள சான் பொ்னாண்டோ பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை மாலை குறைறந்த ஈரப்பதம் காரணமாக திடீரென்று காட்டுத் தீ பற்றியது. அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியது. ஒரு மணிநேரத்துக்கு 800 ஏக்கா் வேகத்தில் தீ பரவி வருகிறது. சுமாா் 32 கி.மீ வரை தீ பரவியதில், 7, 542 ஏக்கா் பகுதிகள் கருகின.

அந்தப் பகுதிகளில் இருந்த 13 சதவீத கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அதையடுத்து லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனா். தன் வீட்டில் பரவிய தீயை அணைக்க முயன்ற முதியவா் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தீயை அணைக்கும் பணியில் 1,000 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தண்ணீா் மற்றும் தீயை அணைக்கும் வேதிப்பொருள்களும் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்படுகின்றன. தீ அதிவேகமாகப் பரவி வருவதால், பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. அந்தப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளைச் சோ்ந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

இதனிடையே, லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 200 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காட்டுத் தீயால் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் கருகின. தீ வேகமாகப் பரவியதில், வீட்டை விட்டு வெளியேற முடியாத 85 வயது மூதாட்டி ஒருவா் தீயில் கருகி உயிரிழந்தாா். அந்தப் பகுதியில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனா். தீயை அணைப்பதற்கு இரு நாள்கள் வரை ஆகும் என்பதால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

கலிஃபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்படுவதும், நிலநடுக்கம் ஆகியவை அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com