50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு!

பாகிஸ்தானில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதால், அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு!


பாகிஸ்தானில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதால், அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

பாகிஸ்தானில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இதனால், நிகழாண்டில் மட்டும் இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ஜியோ செய்திகள் வெளியிட்ட தகவலின்படி, ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்கள் டெங்குவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு நகரங்களில் இருந்து மட்டுமே சுமார் 25,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தின் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்ட 8000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நகரங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை உறுதிபடுத்தியுள்ளது.

டெங்கு வைரஸால் 150 சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கராச்சியில் டெங்குவால் இரண்டு பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அங்கு 14 ஆக  அதிகரித்தது.

டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இப்படி மிகவும் அதிகமாக இருப்பதால் அந்நாட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com