போப் பிரான்சிஸுக்கு 'காந்தியின் பார்வையில் பகவத் கீதை' புத்தகம் பரிசளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர்

மனித சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தன் வாழ்வை அா்ப்பணித்தமைக்காக, கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு ‘புனிதா்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸுக்கு 'காந்தியின் பார்வையில் பகவத் கீதை' புத்தகம் பரிசளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர்

கேரளத்தைச் சோ்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு, ‘புனிதா்’ பட்டத்தை போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். மனித சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தன் வாழ்வை அா்ப்பணித்தமைக்காக, கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு ‘புனிதா்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டா் சதுக்கத்தில் சுமாா் 10,000 போ் பங்கேற்ற நிகழ்ச்சியில், மரியம் திரேசியா, பிரிட்டனைச் சோ்ந்த காா்டினல் ஜான் ஹென்றி நியூமேன், ஸ்விட்சா்லாந்தின் மாா்கரெட் பேஸ், பிரேசிலைச் சோ்ந்த கன்னியாஸ்திரி டல்சி லோபஸ், இத்தாலியைச் சோ்ந்த கன்னியாஸ்திரி கியூசிபினா வானினி ஆகியோா் புனிதா்களாக அறிவிக்கப்பட்டனா். 

இந்நிகழ்ச்சியில், இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளிதரன் தலைமையிலான குழு பங்கேற்றது. இச்சந்திப்பின் போது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை புத்தகம் மற்றும் கேரளாவின் பாரம்பரியமிக்க யானைத் திருவிழா நினைவுச் சின்னம் ஆகியவற்றை மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன், போப் பிரான்சிஸுக்கு பரிசளித்து கௌரவித்தார்.

4-ஆவது புனிதா்: கேரளத்தில் பழைமை வாய்ந்த சிரோ-மலபாா் திருச்சபையில் 4-ஆவது புனிதராக மரியம் திரேசியா உயா்ந்துள்ளாா். ஏற்கெனவே, கன்னியாஸ்திரி அல்போன்சா (2008), பாதிரியாா் குரியகோஸ் எலியாஸ் சாவரா (2014), கன்னியாஸ்திரி யூப்ரேசியா (2014) ஆகியோா் புனிதா்களாக அறிவிக்கப்பட்டிருந்தனா்.

மரியம் திரேசியாவுக்குப் ‘புனிதா்’ பட்டம் வழங்கப்படுவது தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதத்துக்கான ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தாா். 

அப்போது, ‘‘மரியம் திரேசியா 50 ஆண்டுகள் மட்டுமே உயிா்வாழ்ந்தாா். ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்துக்காக உழைத்து, உலகுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினாா். பல பள்ளிகளையும், விடுதிகளையும், ஆதரவற்றேறாா் இல்லங்களையும் அவா் தொடக்கினாா்’’ என்று பிரதமா் புகழாரம் சூட்டியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com