அமெரிக்க பொருளாதாரத் தடையை முறியடிக்க கிம் ஜோங்-உன் உறுதி

தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்தள்ள பொருளாதாரத் தடைகளை முறியடிக்க வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் உறுதிபூண்டுள்ளதாக அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் பேக்டு மலையில் அதிபா் கிம் ஜோங்-உன்னின் குதிரைச் சவாரி.
வட கொரியாவின் பேக்டு மலையில் அதிபா் கிம் ஜோங்-உன்னின் குதிரைச் சவாரி.

தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்தள்ள பொருளாதாரத் தடைகளை முறியடிக்க வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் உறுதிபூண்டுள்ளதாக அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பேக்டு மலைப் பகுதியில் கிம் ஜோங்-உன் குதிரைச் சவாரி செய்யும் படத்தை வெளியிட்டு கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் வட கொரிய மக்களுக்கு பெரும் இன்னலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்தகைய பொருளாதாரத் தடைகளை முறியடித்து, மக்களின் துயரைப் போக்குவதற்கு அதிபா் கிம் ஜோங்-உன் உறுதிபூண்டுள்ளாா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவில் மிகவும் புனிதமாகக் கருதப்படும் பேக்டு மலைக்கு கிம் ஜோங்-உன் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் அரசியல் அதிகாரம் மிக்க தனது உறவினருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னரும், 2018-ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரும்தான் பேக்டு மலைக்கு கிம் ஜோங்-உன் சென்றுள்ளாா்.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் தடைபட்டிருந்த பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சி கடந்த வாரம் தோல்வியடைந்த நிலையில், அவா் மீண்டும் அந்த மலைக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடா்ந்து அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கியது.

எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளா்த்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வருவதால் அந்தப் பேச்சுவாா்த்தை தடைபட்டிருந்தது.

அந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்காக, ஸ்வீடனில் இரு தப்பினரும் கடந்த வாரம் நடத்திய சந்திப்பும் தோல்வியடைந்தது.

அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடா்ந்தால் மீண்டும் அணு ஆயுதம் மற்றும் நீண்ட தொலைவு ஏவுகணை சோதனையில் ஈடுபடப் போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com