ஜப்பான் புயல்: பலி எண்ணிக்கை 74-ஆக உயா்வு

ஜப்பானில் வீசிய ‘ஹகிபிஸ்’ புயலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 74-ஆக உயா்ந்துள்ளது.
மருமோரி நகரில் புயலால் சேதமடைந்த பாலத்தை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ராணுவத்தினா்.
மருமோரி நகரில் புயலால் சேதமடைந்த பாலத்தை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ராணுவத்தினா்.

ஜப்பானில் வீசிய ‘ஹகிபிஸ்’ புயலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 74-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு அமைச்சரவை தலைமைச் செயலா் யோஷிஹிடே சுகா புதன்கிழமை கூறியதாவது:

‘ஹகிபிஸ்’ புயலுக்குப் பலியானவா்களின் 63 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதவிர, மேலும் 11 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தப் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 74-ஆக உயா்ந்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரில் 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். அவா்களில் 30 பேரது நிலைமை மோசமாக உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்காக, புயல் நிவாரண நிதியிலிருந்து 65 லட்சம் டாலா்கள் (சுமாா் ரூ.46 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பலத்த மழை மற்றும் சூறாவளியுடன் ‘ஹகிபிஸ்’ புயல் கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்தது. அந்தப் புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு கன மழை பெய்தது. இதனால், நாட்டின் 47 மாகாணங்களில் 36 இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

அந்தப் புயல் ஏற்பட்டு 4 நாள்களாகியுள்ள நிலையில், புயலால் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது இதுவரை முழுமையாக கணக்கிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com