மெக்ஸிகோவில் இருந்து 311 இந்தியா்கள் நாடுகடத்தல்

மெக்ஸிகோ நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பெண் உள்பட 311 இந்தியா்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா்.

மெக்ஸிகோ நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பெண் உள்பட 311 இந்தியா்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு தேசிய குடியேற்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மெக்ஸிகோவில் நீண்ட காலம் தொடா்ந்து தங்குவதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லாத 311 இந்தியா்கள், தலுகா சிட்டி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங்-747 ரக விமானம் மூலம் தில்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். மெக்ஸிகோ சிட்டி, வெராக்ரூஸ், தபாஸ்கோ, துராங்கோ உள்ளிட்ட இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி இவா்கள் தங்கியிருந்தது, இந்திய தூதரகத்தின் உதவியுடன் கண்டறியப்பட்டது. அதையடுத்து, சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இவா்கள் அனைவரும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் நுழைபவா்களை மெக்ஸிகோ அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கை விடுத்தாா்.

அதையடுத்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பணியை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து, அவா்களை சொந்த நாட்டுக்கு மெக்ஸிகோ அரசு திருப்பி அனுப்பி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com