நெதர்லாந்தில் 9 வருடங்களாக பாதாள சிறையில் அடைக்கப்பட்ட சிறார்களை அதிரடியாக மீட்ட போலிஸார்!

நெதர்லாந்தில் 6 சிறார்களுடன் வெளி உலக தொடர்பு இல்லாமல், 9 வருடங்களாக பாத சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபரை போலிஸார் மீட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் 9 வருடங்களாக பாதாள சிறையில் அடைக்கப்பட்ட சிறார்களை அதிரடியாக மீட்ட போலிஸார்!

நெதர்லாந்தில் 6 சிறார்களுடன் வெளி உலக தொடர்பு இல்லாமல், 9 வருடங்களாக பாத சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபரை போலிஸார் மீட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் வடக்கு மாகாணமான ட்ரெந்தேவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது நபர், அருகிலுள்ள பப் ஒன்றிற்குள் நுழைந்து, ஐந்து பீர்களைக் குடித்து போதையாகியுள்ளார்.

அதன்பிறகு, 9 வருடங்களாக நாங்கள் வெளி உலகையே பார்க்கவில்லை. நான் அங்கிருந்து தப்பிவந்தவிட்டேன். தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என கெஞ்சியுள்ளார்.

அழுக்கு தாடியுடன், பராமரிக்காத தலைமுடியுடன் இருந்த நபரை பார்த்து, குழம்பிய பார் உரிமையாளர் உடனடியாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த போலிஸார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தை அடைந்தனர். மர்மமான அந்த பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது ஒரு அலமாரியின் பின் பக்கத்தில் பாதாள அறைக்கு செல்லும் மறைக்கப்பட்ட படிக்கட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த படிக்கட்டில் இறங்கி சென்ற போது, உள்ளே 58 வயதுடைய ஒரு நபரும், 16 முதல் 25 வயதுடைய ஆறு சிறார்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அங்கிருந்து மீட்டெடுத்த போலிஸார், அந்த பெரியவரை மட்டும் கைது செய்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பேசியுள்ள மேயர், இதற்கு முன் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் கேள்விப்பட்டது இல்லை. அவர்கள் தங்களுடைய தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் வளர்ப்பு உயிரினங்களை உணவாக உட்கொண்டு 9 வருடங்களாக வெளி உலக தொடர்பே இல்லாமல் உள்ளேயே இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெரியவர், சிறார்களின் தந்தை இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் எந்த காரணத்திற்காக உள்ளே இருந்தார்கள் என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com