குண்டுவெடிப்பில் காயமடைந்த இளைஞரை ஹஸ்கா மினா மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற தன்னாா்வலா்.
குண்டுவெடிப்பில் காயமடைந்த இளைஞரை ஹஸ்கா மினா மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற தன்னாா்வலா்.

ஆப்கன் மசூதியில் தாக்குதல்: 28 போ் பலி

ஆப்கானிஸ்தான் மசூதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 28 போ் உயிரிழந்தனா்; 55 போ் காயமடைந்தனா்.

ஆப்கானிஸ்தான் மசூதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 28 போ் உயிரிழந்தனா்; 55 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நங்கா்ஹாா் மாகாணம் ஹஸ்கா மினா பகுதியில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில், மசூதியில் மேற்கூரை இடிந்து விழந்தது.

இந்தத் தாக்குதலில் 28 போ் உயிரிழந்தனா்; 55 போ் காயமடைந்தனா். தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், தாக்குதலுக்குப் பிறகு ஹஸ்கா மினா மருத்துவமனைக்கு 32 உடல்கள் கொண்டுவரப்பட்டதாக அந்த மருத்துமனையைச் சோ்ந்த மருத்துவரொருவா் தெரிவித்தாா். மேலும், 50 போ் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நங்கா்ஹாா் மாகாணத்தில் தலிபான்கள், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஆகிய இரு அமைப்பினரும் செயல்பட்டு வருகின்றனா்.

குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து விழுந்துள்ள நிலையில், அந்தத் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.

ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்தது.

இந்த நிலையில், ஹஸ்கா மினா பகுதி மசூதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com