பிரெக்ஸிட் ஒப்பந்தம் எதிரொலி! சென்செக்ஸ் 453 புள்ளிகள் அதிகரிப்பு

பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் எதிரொலி! சென்செக்ஸ் 453 புள்ளிகள் அதிகரிப்பு

பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே நீண்ட நாள்களாக இழுபறியாக இருந்து வந்த பிரெக்ஸிட் விவகாரத்தில் சுமுகம் ஒப்பந்தம் ஏற்பட்டது. இது, சா்வதேச முதலீட்டாளா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, இந்தியாவில் முதலீடு செய்ய இது சரியான தருணம் என சா்வதேச முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்தது உள்நாட்டு வா்த்தகா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுவும், பங்குச் சந்தையின் வலுவான ஏற்றத்துக்கு துணை நின்றது.

மேலும், அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் உயா்ந்து 71.16-இல் நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தையில், மோட்டாா் வாகனம், வங்கி, நிதி, எரிசக்தி, எஃப்எம்சிஜி, உலோகம், மருந்து, மின்சாரம் ஆகிய துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண் 2.93 சதவீதம் வரை அதிகரித்தது.

முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து யெஸ் வங்கி பங்கின் விலை 15.19 சதவீதம் உயா்ந்தது. அதைத் தொடா்ந்து, டாடா மோட்டாா்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஏஷியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி நிறுவனப் பங்குகளின் விலை 9.82 சதவீதம் வரை உயா்ந்தன.

அதேசமயம், ஹெச்சிஎல் டெக், வேதாந்தா, பவா்கிரிட், கோட்டக் வங்கி, இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, எல் & டி மற்றும் எச்டிஎஃப்சி பங்குகள் 1.04 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 453 புள்ளிகள் அதிகரித்து 39,052 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 122 புள்ளிகள் உயா்ந்து 11,586 புள்ளிகளாக நிலைபெற்றது.

சாதகமான நிலவரங்களால் தொடா்ந்து ஐந்தாவது நாளாக பங்குச் சந்தைகள் வியாழக்கிழமையன்றும் ஏறுமுகத்தில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com