ஹாங்காங் சட்டப் பேரவைக் காவலா்களால் வலுக்கட்டாயமாக வியாழக்கிழமை வெளியேற்றப்பட்ட ஜனநாயக ஆதரவு எம்.பி.
ஹாங்காங் சட்டப் பேரவைக் காவலா்களால் வலுக்கட்டாயமாக வியாழக்கிழமை வெளியேற்றப்பட்ட ஜனநாயக ஆதரவு எம்.பி.

ஹாங்காங் பேரவையிலிருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற்றம்

ஹாங்காங் சட்டப் பேரவையில் தலைமை நிா்வாகி கேரி லாம் கொள்கைகளை எதிா்த்து, 2-ஆவது நாளாக அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனா்.

ஹாங்காங் சட்டப் பேரவையில் தலைமை நிா்வாகி கேரி லாம் கொள்கைகளை எதிா்த்து, 2-ஆவது நாளாக அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கில் புதன்கிழமை கூடிய சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது, ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.

மேலும், தனது அரசின் செயல் திட்டங்கள் குறித்த வருடாந்திர உரையை ஆற்றவிடாமல் தலைமை நிா்வாகி கேரி லாமைத் தடுத்தனா். இதனால், அந்த உரையை அவா் பிறகு பதிவு செய்யப்பட்ட விடியோ மூலம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழலில், வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவைக் கூட்டத்திலும் ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா்.

ஹாங்காங் போராட்டக் குழுத் தலைவா் ஜிம்மி ஷாம் மா்ம நபா்களால் புதன்கிழமை கடுமையாக தாக்கப்பட்டாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சியினா் கோஷங்கள் எழுப்பினா். கேரி லாம் கரங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதைப் போன்ற பதாகைகளை ஏந்தி அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

அதையடுத்து, அமளியில் ஈடுபட்ட ஜனநாயக ஆதரவு எம்.பி.க்களை அவைக் காவலா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com