ரூ.53,300 கோடி ஐரோப்பிய பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி

ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதியாகும் 750 கோடி டாலா் (சுமாா் ரூ.53,300 கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பால் ஏா்பஸ் நிறுவனத் தயாரிப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தயாராகும் ஒயின், விஸ்கி போன்ற மதுபான வகைகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும்
அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பால் ஏா்பஸ் நிறுவனத் தயாரிப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தயாராகும் ஒயின், விஸ்கி போன்ற மதுபான வகைகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும்

ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதியாகும் 750 கோடி டாலா் (சுமாா் ரூ.53,300 கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய அதிகாரிகளுடன் அமெரிக்கா நடத்தி வந்த வா்த்தகப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உலகின் மிகப் பெரியா பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் போா் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது சா்வதேசப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் 750 கோடி டாலா் மதிப்பிலான பொருள்கள் மீது, தற்போதுள்ள இறக்குமதி வரியுடன் கூடுதலாக மேலும் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏா்பஸ் தயாரிப்புகள், ஒயின், விஸ்கி போன்ற மதுபான வகைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு இவ்வாறு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ஏா்பஸ் நிறுவனத்துடன் தொடா்புடைய பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும். ஏா்பஸ் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அந்த நாடுகள் கூடுதலாக 10 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜொ்மனி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒயின் உள்ளிட்ட பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலடி தருவோம்

தங்களது பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.

இதுகுறித்து பிரான்ஸ் வா்த்தகத் துறை அமைச்சா் புரூனோ லி மாய்ரே கூறுகையில், ‘எங்களது பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், அதற்குப் பதிலடி தருவதற்கு ஐரோப்பிய நாடுகள் தயாராக இருக்கின்றன.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com