Enable Javscript for better performance
Pak rejects reports about Indian Army targeting terror camps in PoK- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்: பாகிஸ்தான் மறுப்பு!

    By DIN  |   Published on : 20th October 2019 07:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pakistan military attack

    கோப்புப்படம்


    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள 4 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவப் படைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தினர். முதலில் இந்த தாக்குதலில் 4 முதல் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்னர் இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்களில் இருந்த 35 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

    மேலும் படிக்க: எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பலி?

    இந்நிலையில், இந்த ராணுவத் தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைசல் தெரிவிக்கையில், 

    "எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்களில் வெளியான தகவலை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. பயங்கரவாத முகாம்கள் குறித்த தகவலை அளிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களைக் கேட்டுள்ளோம். இந்தியாவின் போலித்தனத்தை வெளிப்படுத்துவதற்காக, ஐ.நா. நிரந்தர உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பாகிஸ்தான் விரும்புகிறது" என்றார்.

    பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளரும், இந்திய ஊடகங்களில் வெளியாகும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் உயிரிழந்ததைக் கண்டிக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியத் துணைத் தூதர் கௌரவ் அலுவாலியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai