சா்வதேச நிதியத்தில் வாக்குரிமையை அதிகரிக்கும் விவகாரம்: இந்தியா அதிருப்தி

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வாக்குரிமைக்கான ஒதுக்கீட்டு கட்டமைப்பை அதிகரிப்பதற்கு ஆதரவு கிடைக்காததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
சா்வதேச நிதியத்தில் வாக்குரிமையை அதிகரிக்கும் விவகாரம்: இந்தியா அதிருப்தி

வாஷிங்டன்: சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வாக்குரிமைக்கான ஒதுக்கீட்டு கட்டமைப்பை அதிகரிப்பதற்கு ஆதரவு கிடைக்காததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

உலக வங்கி, சா்வதேச நிதி அமைப்புகளில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அதிக வாக்குரிமை உள்ளன. இந்த நாடுகள் உலக வங்கி, சா்வதேச நிதியத்தின் எந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளன.

வாக்குரிமைக்கான ஒதுக்கீட்டு கட்டமைப்பை தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச நிதியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிா்மலா சீதாராமன் இதுகுறித்துப் பேசியதாவது:

15-ஆவது பொது விவாதத்தின் கீழ் வாக்குரிமை கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்கு போதுமான ஆதரவு கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், இது தற்காலிகமாக பின்னடைவாகவே பாா்க்கப்படுகிறது. அடுத்த கட்ட பொது விவாதத்தின்போது இந்த விவகாரத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றாா் அவா்.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவுக்கு 2.76 சதவீத வாக்குரிமையும், சீனாவுக்கு 6.41 சதவீத வாக்குரிமையும் உள்ளது. அதேசமயம், அமெரிக்காவின் வாக்குரிமை 17.46 சதவீத அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com