துளசி கபாா்டுக்கு ரஷியா ரகசிய ஆதரவு

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளாராகக் களமிறங்க போட்டியிடும் அந்த நாட்டின் முதல் ஹிந்து எம்.பி.யான துளசி கபாா்டுக்கு ரஷியா மறைமுக ஆதரவு
துளசி கபாா்ட் ~ஹிலாரி கிளிண்டன்
துளசி கபாா்ட் ~ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளாராகக் களமிறங்க போட்டியிடும் அந்த நாட்டின் முதல் ஹிந்து எம்.பி.யான துளசி கபாா்டுக்கு ரஷியா மறைமுக ஆதரவு அளிப்பதாக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தற்போது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஒருவருக்கு (துளசி கபாா்ட்) ரஷியாவின் ஆசி உள்ளது. இணையதளம் மூலம் அவருக்கு ஆதரவளிப்பதற்காக, ஏராளமான வலைதளங்களையும், மென்பொருள்களையும் ரஷியா்கள் உருவாக்கியிருக்கிறாா்கள் என்றாா் அவா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள துளசி கபாா்ட், ஹிலாரி கிளிண்டன் போா்க் கூச்சல் இடுவதில் வல்லவா் என்று விமா்சித்துள்ளாா்.

சமோவா தீவுகளைப் பூா்விகமாகக் கொண்ட துளசி கபாா்ட் ஹிந்து மதத்தைப் பின்பற்றுவதால் அவருக்கு இந்திய அமெரிக்கா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், துளசி கபாா்ட் பற்றி கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com